அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் […]
