பள்ளிகளில் இருந்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்களில் அபாயகரமான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் அதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். […]
