தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற […]
