Categories
உலக செய்திகள்

போலியான ஆவணங்களை சமர்ப்பிக்காதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

கனடாவிற்குள் பொய்யான ஆவணங்களை சமர்பித்து நுழைந்த இரண்டு அமெரிக்கர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டொராண்டோவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பான பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளர். மேலும் பொது சுகாதார நிறுவனம் அந்த இரண்டு அமெரிக்கர்களும் அரசு அங்கீகாரம் பெற்ற விடுதியில் தங்குவது மற்றும் வருகை சோதனை உள்ளிட்டவைகளுக்கும் இணங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 19,720 […]

Categories
உலக செய்திகள்

கனடாவிற்கு வந்த அமெரிக்கர்கள் இருவருக்கு அபராதம்.. பொய்யான ஆதாரங்கள் மாட்டியது..!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவர் பொய்யான ஆவணங்களைக் காட்டி கனடா நாட்டிற்குள் புகுந்ததால் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டிலிருந்து ரொறன்ரோவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு நபர்களிடம் கனடா நாட்டிற்குள் நுழைவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், பயணத்திற்கு முன்பு மேற்கொண்ட சோதனைகள் போன்றவற்றில் பொய்யான ஆதாரங்களை அளித்துள்ளார்கள். மேலும் கனடா […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை அவமதித்த நபர்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் தலிப்பான் என கூறி இளம்பெண்ணை அவமதித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் 18 வயது இளம்பெண்ணை 36 வயதான நபர் ஒருவர் தீவிரவாதி என அடையாளப்படுத்தி அவரை அவமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 30 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதமும், நீதிமன்றம் விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகளும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலையா ….? ரூ 200 அபராதம் ….. நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை….!!!

நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . ஆனால் பொதுமக்கள் சிலர் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்  தம்புராஜ்  […]

Categories
உலக செய்திகள்

திருமணமாகாமல் கர்பமான இளம்பெண்…. குழந்தை பிறந்த உடனே தாய் செய்த கொடூரம்…. நீதிமன்றம் கொடுத்த புதுவித தீர்ப்பு….!!

திருமணமாகாத நேபாள இளம்பெண் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் புதுவித தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகாத தற்போது 24 வயதாகும் பபிதா என்னும் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமாகாமல் இருந்ததால் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட பபிதா இங்கிலாந்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு சொல்லியும் கேட்கல…. தடையை மீறி வாறாங்க…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் தடையை மீறி உள்ளே நுழைந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடையையும் மீறி ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின்படி தடையை மீறி பழைய […]

Categories
உலக செய்திகள்

“நல்லதுக்கு காலமில்லை!”.. புறாவுக்கு இரை வைத்தது குற்றமா..? இந்திய மாணவருக்கு நேர்ந்த நிலை..!!

மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர்  Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்திருக்கிறது. எனவே தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு இரையாக போட்டுள்ளார். அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனவே ரிஷி, இந்திய நாட்டில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. அபராதம்…. அரசு அதிரடி எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

அபராதம்… தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து திங்கள்கிழமை முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

உடனே இத செய்யுங்க… “இல்லைனா 10 லட்சம் வரை அபராதம்”… மாநகராட்சி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தீவிரமடைந்து தற்போதுதான் சற்று குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொசு மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாலைகளில் சுற்றி திரியும் மாடு…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை…. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு 10 ரூபாய் அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. எனவே சில சமயங்களில் வாகனங்கள் விபத்து ஏற்படுவதனால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

விதிமீறல்: கூகுளுக்கு ரூ.4400 கோடி(500 மில்லியன் யூரோ) அபராதம்….!!!!

ஊடக நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பிரான்ஸ் நாட்டின் சந்தைப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய பங்குத்தொகையை அளிப்பதில்லை எனச் சர்ச்சை எழுந்தது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. அந்நிறுவனங்கள் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி யார் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி  சென்னையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விஜய்க்கு அபராதம்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மட்டும்… மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் – கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் டெங்குவின் தொடர்ச்சியான ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சென்னையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் ரூபாய் 100 முதல் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வீடுகளுக்கு ரூபாய் 200 வரையும், அடுக்குமாடி […]

Categories
பல்சுவை

2 பான் கார்டு இருக்கா…? உடனே இதைப் பண்ணலனா ரூ.10,000 அபராதம்… எப்படி செய்வது… முழு விவரம் இதோ..!!!

ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் அதில் ஒன்றை எப்படி சரண்டர் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அப்படி செய்யவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் வழங்கியுள்ளது. பான் கார்டு மூலமாக ஒருவரின் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. அதிக தொகை கொடுத்து நகை […]

Categories
தேசிய செய்திகள்

4 ரூபாய் ஜிஎஸ்டி போட்டதால் 20,000 ரூபாய் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த கார்க் என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் மொபைல் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ரூ.144 மதிப்பிற்கு உணவுடன் 3 குளிர்பானங்களை 90 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். கார்க் ஏற்கனவே எம்.ஆர்.பி விலைக்கு மேல் பணம் செலுத்தியிருந்தாலும் குளிர்பானத்திற்கு ஜி.எஸ்.டியாக ரூ.4.50 வசூலிக்கப்பட்டதை உணர்ந்தார். நுகர்வோர் பொருட்கள்  சட்டம், 2006 இன் கீழ் சட்டவிரோதமானது என்று நுகர்வோர் ஆணையத்தில் வாதிட்டார். இதற்கு ஸ்விகி தரப்பில், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைக்காட்டி நான்கு வழிச்சாலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருள் பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் போன்றோர் மளிகை கடை, பெட்டி கடை, துணிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 20 கடைக்காரர்களுக்கு 200 ரூபாய் வீதம் என மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்… ஐகோர்ட் அதிரடி…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட நந்திகிராமம் தொகுதியில் நீண்ட பிரச்சனைக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பின்னர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியில் செல்லும்போது…. இதை கொண்டுபோக மறந்து விடாதீங்க…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் கிரீன் சர்க்கிள், அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்தித்து, மக்கான் சிக்னல் போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னால் கேட்க மாட்டீங்க…. அப்புறம் இப்படிதா பண்ணனும்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத மீன், இறைச்சி கடை உரிமையாளருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கான் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றபடுவதில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி கலெக்டர் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரகுராம், திவ்யபிரணவ், கிராம நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நேற்று ஒரே நாளில் ரூ.22.48 லட்சம் வசூல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஜூலை-5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நாட்களில் அனாவசியமாக வெளியே சுற்றித் திரிந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணியாமல் சிக்கினால்… ரூ. 500 அபராதம்… தெற்கு ரயில்வே எச்சரிக்கை…!!!

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் தற்போது ரயில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை….!!

பேரணாம்பட்டு அருகில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு விற்க முயற்சி செய்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் சங்கரய்யா தலைமையில், வனவர்கள் ஹரி, மோகனவேல், தயாளன், வனக் காப்பாளர்கள் விஸ்வநாதன், காந்த குமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனம் இயக்கினால் ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சும்மா வரக்கூடாது… 30,600 அபராதம் … காவல்துறையினரின் தீவிர செயல்…!!

அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 153 நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே அதிபர் தான்..! பிரபல நாட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு… அதிரடியாக விதிக்கப்பட்ட அபராதம்..!!

பிரேசில் நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் பேரணியில் ஈடுபட்ட அதிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதுவரை ஒரு கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சுகாதார நெருக்கடிக்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோவின் அலட்சியமே காரணம் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதிக்கே அபராதமா…? யாரு செஞ்சாலும் தப்பு தப்புதான்…. கடுமையாக பின்பற்றப்படும் கொரோனா விதிமுறைகள்….!!

பிரேசில் நாட்டின் ஜனாதிபதி முகக்கவசமின்றி சைக்கிள் பேரணியை துவங்கி வைத்ததால் அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ தலைமையில் சாவ் பாலோ என்னும் நகரத்தில் “Accelerate For Chirst” என்னும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது. இந்தப் பேரணியில் பலரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளுடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த வேளையில் பிரேசில் நாட்டு ஜனாதிபதி முககவசமின்றி, ஒரு ஹெல்மெட்டை மட்டும் அணிந்து கொண்டு இதனை துவக்கி […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களே விதியை மீறலாமா…? இரு நிறுவனங்களுக்கு அபராதம்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் அரசு வங்கிக்கு தாசில்தார் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறது. இது குறித்து தாசில்தார் காமாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு அரசு வங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை வருவாய்த்துறையினர் பார்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த கடைகளுக்கு அனுமதி இல்லை… சோதனை செய்த தாசில்தார்… 7 கடைகளுக்கு அபராதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த கடைகள் உட்பட சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி, பலசரக்கு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அங்காடி மற்றும் பேன்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சொல்றத கேட்கிறதே கிடையாது… சீல் வைக்கப்பட்ட கடைகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் அரசு அனுமதி அளிக்காத கடைகளில் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெறுவதாக வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நகராட்சி ஆணையாளரின் தலைமையில் காவல்துறையினர் அங்கு  விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

அமராவதி எம்பி, நடிகை நவ்னீத் கவுருக்கு…. ரூ.2 லட்சம் அபராதம்…..!!!

அமராவதி மக்களவை தனி தொகுதியில் போலியான ஜாதி சான்றிதழ் அளித்து நடிகை நவ்நீத் கவுர் வெற்றி பெற்றார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நவ்நீத் கவூரின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் நாகூர் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரங்களுக்குள் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

Categories
சினிமா

பிரபல நடிகை ஜூஹிக்கு ரூ.20 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்யக்கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து வழங்கிய கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓமியோபதி மருத்துவர் சீதாராமன் கிளினிக் வைத்துள்ளார். அவரது கிளினிக்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து விற்பனை செய்வதாகவும் மேலும் மருத்துவம் பார்ப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்தீஷ்குமார், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! பொதுமக்களின் அலட்சியம்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற இரண்டு பேருக்கு ரூ. 500 வீதம் ஆயிரம் ரூபாயும், முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்த 34 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,800-ம் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம், வருவாய்த்துறை சார்பில் முககவசம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

306 நபர்களுக்கு அபராதம்…. முக கவசம் அணியாமல் சென்றதால் காவல்துறையினர் நடவடிக்கை…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 306 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதத்தை விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினுடைய தாக்கம் மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது முழு ஊரடங்கையும் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், முகக் கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருநெல்வேலியில் பொது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 3,515 பேர் மீது வழக்குப்பதிவு… தீவிர கண்காணிப்பு பணி.. அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த 3,515 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக கவசம்  அணியாமல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 3,515  பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

செல்போனை உளவு பார்த்த மனைவிக்கு… ரூ.1 லட்சம் ஃபைன்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கணவரின் செல்போனை உளவு பார்த்த பெண்ணிற்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி உரிமை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக கணவன் மனைவியின் செல்போனை பார்ப்பதும், மனைவி கணவனின் செல்போனை பார்ப்பதும் தனியுரிமை பாதிப்பு என்று கருதுகின்றனர். இதன் காரணமாக பல பிரச்சனைகளும் தம்பதிகளுக்குள் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காவல் துறையினருக்கு அபராதம்…. முக கவசம் அணியாததால் அதிரடி நடவடிக்கை…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் முகக் கவசத்தை அணியாத போலீஸ்காரருக்கு காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி அபராதத்தை விதித்துள்ளார். தேனி மாவட்டம் அரண்மனைபுதூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதனை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஆயுதப்படை காவல்துறையினர் பைக்கில் முகக் கவசமின்றி வந்துள்ளார். அதனை கவனித்த காவல்துறை சூப்பிரண்டு அங்கிருந்த காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ்காரரினுடைய பைக்கை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதன்பின் ஆயுதப்படை காவல்துறையினரை சூப்பிரண்ட் முகக் கவசமின்றி வந்ததற்கு கண்டித்ததோடு மட்டுமல்லாமல் 200 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

350 நபர்களுக்கு அபராதம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 350 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் தற்போது முழு ஊரங்கையும் தமிழக அரசு அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் அபராதம்… கர்நாடக துணை முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளிப்படுத்துவதில் தாமதித்த 40 மையங்களுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் மையங்கள் சிலவற்றில் மக்களின் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“பண மோசடி வழக்கு!”.. பிரபல கால்பந்து கூட்டமைப்பின் அலுவலர் மீது குற்றச்சாட்டு..!!

சுவிட்சர்லாந்து அரசு, பணமோசடியில் ஈடுபட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரல் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  Conmebol என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரலாக இருந்தவர் 79 வயதான Eduardo Deluca. இவர் மீது சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் 18,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்பு அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு… கொரோனா பரிசோதனை… சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமலும் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் தற்போது தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. அங்கு காய்கறி விற்பனை செய்து வரும் 46 கடை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதை செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பலர் காய்கறி வாங்க வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 180 பேர் மீது வழக்கு… 25 பேரிடம் அபராதம் வசூல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 180 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்ததாக 180 பேர் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைந்த அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியில் நடமாட கூடாது என்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறிய பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஊரடங்கு விதியை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல திறக்கக் கூடாது… விதிமுறையை மீறினால் அவ்ளோதான்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாணியம்பாடியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சிவனருள் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் அதிகாரிகள் பலர் சிஎஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தமிழக அரசினால் […]

Categories

Tech |