தனியார் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிந்தன்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே பழுதான எந்திரங்களை சரி செய்து தருமாறு சசிகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் சசிகுமார் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் […]
