Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோகளுக்கு …. அபராதம் விதித்த அதிகாரிகள் ….!!!

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி  நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது ,அதி வேகமாக சென்று விபத்துக்கள் ஏற்படுவது போன்ற புகார்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இந்தப புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி ,நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின்படி வட்டார போக்குவரத்து அலுவலரான வெங்கட கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நாகை மற்றும் சுற்றுவட்டார […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… தீவிர சோதனை…. அபராதம் வசூல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது இறைச்சி கடை திறந்து விற்பனை செய்த 2 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைவாசல் பகுதியிலுள்ள வீரகனூர், வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் இறைச்சி கடை  திறந்து விற்பனை செய்த இரண்டு பேருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 75 ஆயிரம் அபராதம்… நீங்க கட்டியே ஆகனும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு வன அலுவலர் அபராதம் விதித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி வனப்பகுதிக்கு அருகில் சிறுமலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் நாய்கள் துரத்தி கடித்ததால் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து விட்டது. இந்நிலையில் அந்த புள்ளி மானை அறுத்து அதன் இறைச்சியை சமைப்பதாக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தவறு… நீங்க கட்டியே ஆகனும்… அபராதம் வசூலித்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் தடையை மீறி பூக்கடை திறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, இறைச்சி மளிகை, பூக்கடை மற்றும் பழக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12  மணிக்கு பிறகும் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னக்கடை வீதியில் தடையை மீறி சில வியாபாரிகள் பூக்கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளனர். மேலும் பூக்கடையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… அபராதம் வசூல்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையினர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கடை வீதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூல்…. 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் எடுக்காம சொகுசு பயணம்… சிக்கினா 500 ரூபா… 2 மாசத்துல 5 லட்சம்…!!!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “மாநகரப் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை எதுவும் இல்லாமல் பயணம் செய்வது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயல். பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல் – ரூ.20.53 கோடி அபராதம் வசூல்

கொரோனா ஊரடங்கு மீறியதாக தமிழகம் முழுவதும் 20 கோடியே 53 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 106 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 8,75,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 6,80,247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 20,53,51,588 ரூபாய் வசூலிக்க பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |