தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு திமுக அரசு விவசாயிகளின் விருப்பமின்றி வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தன்னுடைய எதிர்ப்புதான் காரணம் என்று கூறியிருந்தார். […]
