அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த நிலையில் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என ஓமப்பொடி பிரசாந்த் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 4ஆம் […]
