அதிமுகவில் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் இவ்வாறு அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் எனவும் காலியாக உள்ள அனைத்து பொறுப்புகளும் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
