அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில் 7 பிரிவுகளின் கீழ் […]
