திமுக ஆட்சியின் 100ஆம் நாளான இன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தத் திட்டமானது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இனி ஆலயங்களில் தாய்மொழி தமிழில் அர்ச்சனை நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு […]
