பெரம்பலூர் அருகே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துறை மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் கலையரசி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாரியம்மாள், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். […]
