அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் சில காவலர்கள் […]
