திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் 6-ம் நாளான இன்று காலை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்ஜவர் மலையப்ப சுவாமி காலை, இரவு ஆகிய வேலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில் உற்சவத்தின் 6-ம் நாளான இன்று திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி கோவிலில் இருக்கும் அரங்கநாயக மண்டபத்தை அடைந்து […]
