Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொது குழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வாதாடினார். ஆனால் நாளை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை […]

Categories
மாநில செய்திகள்

“STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

2022-23ம் கல்வியாண்டில் STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை தற்போது பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க STEM வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் கருவி, நடமாடும் ஆய்வகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஜூலை 4ஆம் தேதி முதல் அமல்…. கனடாவாழ் இந்தியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சூப்பர் விசா மூலம் பெற்றோர்,தாத்தா பாட்டியை இவர்கள் கனடாவுக்குள் அழைத்துச் செல்ல. வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி முதல் இந்த விதி கமலுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் அவர்கள் 5 ஆண்டுகள் வரை பிள்ளைகளுடன் கனடாவில் வாழலாம். இதனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் அனுமதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கனடாவில் வாழும் இந்தியர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி…. அறிவித்த அதிகாரிகள்….!!!!

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து  சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  அருவியில்  நீர் வரத்து  குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள்  […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இவ்வாறு அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த 16 மருந்துகளை வாங்க இனி…. பரிந்துரை சீட்டு தேவையில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 1945ஆம் ஆண்டு மருந்து விற்பனையில் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. அதன்படி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே சில மருந்துகளை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் சில மருந்துகளை மட்டும் சில்லறை விற்பனையில் விற்பதற்கு அனுமதி வழங்கியது. மேலும் மருத்துவரிடம் மருந்து பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தால் மருந்து பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இனி 24 மணிநேரமும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டே இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் இனி இருபத்தி நான்கு மணி நேரமும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படலாம். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி செல்ல மே 27 – 31 வரை பக்தர்களுக்கு அனுமதி….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் கட்டட அனுமதி….. சென்னை மாநகராட்சியின் மாஸ்டர் செக்…..!!!!

கட்டிட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் இழுத்தடிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க அந்த தொகுதிக்கு தொடர்புடைய வார்டு உதவியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர்கள் தங்கள் பகுதிகளின் கட்டுமான […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல…. இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி…!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல  மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று 13-ந் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாமா?….. வனத்துறை அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!

கோவை அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலை எனவும் தென்கைலாயம் அழைக்கின்றனர். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென வானிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சித்ரா […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே …. பாத யாத்திரைக்கு அனுமதி…. தேவஸ்தான குழுத்தலைவர் அறிவிப்பு….!!!!!!!

திருப்பதியில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி, புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறக்க முடியுமா….? அதனால் என்ன பயன்….. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வங்கியில் குழந்தைகளுக்கு என கணக்கை திறக்க முடியுமா? அப்படி திறந்தால் அவர்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பள்ளி செல்லும் காலத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வரை நாம் பெற்றோரிடம் பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை பெறுவது வழக்கம். அதனை சிறு குழந்தைகள் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். கல்லூரி செல்லும் இளைஞர்கள் டீ காபி கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை அருந்துவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியை சில குழந்தைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”….. இனி ரயிலில் பயணம் செய்யலாம்….!!!

செல்லப்பிராணிகளை இந்தியாவில் ரயிலில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தற்போது அனைவருமே வீடுகளில் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்களின் வீடுகளிலேயே விட்டுச் செல்கின்றன. சில போக்குவரத்து செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் பலரும் தங்களது பிராணிகளை தனியாக விட்டு மிகுந்த கவலையுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. மீண்டும் விரைவில்…. சம்மர் ஸ்பெஷல்….!!!!!!!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகளில்  பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்  இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால்  தள்ளு,முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர். இதனை அடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
மாநில செய்திகள்

உலக பாரம்பரிய தினம்…. மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரியம் மற்றும்  கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற  […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் ஹஜ் பயண அனுமதி…. வரும் 22ஆம் தேதி வரை மட்டுமே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்திலிருந்து ஹஜ்பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக செல்ல விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பக்தர்களும் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகின்ற […]

Categories
Tech டெக்னாலஜி

குஷியோ குஷி…. இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். இது பல்வேறு சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பண பரிவர்த்தனை சேவைகளும் இதில் உள்ளன. இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ் ஆப் உள்ளது. என்ன ஏமாத்துறாங்க இருந்தாலும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் பே 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விரிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நான்கு கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் பே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சதுரகிரி செல்ல நாளை முதல் அனுமதி…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை(ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 18 வரை 5 நாட்கள் பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை நடை திறப்பு…. இன்று முதல் ஏப்ரல் 18 வரை பக்தர்களுக்கு அனுமதி…..!!!!

சித்திரை விஷு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. அதில் நேற்று சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடந்தன. இந்நிலையில் தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 18-ஆம் தேதி பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படும். மேலும் கோவிலில் பூஜைகள் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

சித்திரை விஷு பண்டிகை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு… வெளியான தகவல்…!!!!!

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று  நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

அன்னதானம் செய்ய அனுமதி பெற வேண்டும்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில் திருவண்ணாமலைக்கு 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிவலப்பாதையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் செய்ய விரும்புவோர் வருகின்ற ஏப்ரல் 14ம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி இடையே மெட்ரோ…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழித்தடத்தில் 26.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. அதேசமயம் இந்த மெட்ரோ வழித்தடத்தில் 10.3 கிலோமீட்டர் சுரங்கப் பாதையாக அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்காக…. வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!

ஏரி மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள நீர் முழுவதையும் பயன்படுத்திய பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் நிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கும். எனவே விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண் வளத்தை மேம்படுத்துவதற்கு ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : 5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி…. மத்தியமைச்சர் உறுதி….!!!

5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மின் தேவையை பூர்த்தி செய்ய…. ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால் மின்வாரியம், மத்திய அரசின் மின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம்கொள்முதல் செய்கிறது. ஆகவே மத்திய அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து இப்போது டெண்டர்’ கோரி, 5 வருடங்களுக்கு 1,500 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்குமாறு மின் வாரியம் சார்பாக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுகொடுக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம் 1 யூனிட் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி”… தமிழ்நாடு அரசு அரசாணை….!!!!!

தமிழகத்தில் இருளர் இனமக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இந்த அரசாணை வாயிலாக விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்து இருக்கிறது. பாம்புகளை பிடிக்க இருளர் இனமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலக அளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடும் விஷமுள்ள […]

Categories
உலக செய்திகள்

ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்…. கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர்…!!!!!

ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நோட்டா  நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதில் பேசிய ஜோ பைடன் “உக்ரைன் படையெடுப்பு  தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக பேசிய ரஷ்ய  உயிரடுக்குகள், சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகளில் புதிய தொகுப்பை அறிவித்துள்ளார். மாநாட்டிற்குப் பின் பேசிய ஜோ […]

Categories
உலக செய்திகள்

“மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் நாட்டில் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன்”… இந்திய வம்சாவளி வீரர் கருத்து…!!!!!

அமெரிக்க விமானப்படை பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அனுமதி அளித்திருக்கிறது. அமெரிக்க விமானப் படையில் தர்ஷன் ஷா  பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதுவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமான படை அனுமதி அளித்திருக்கிறது. இது பற்றி  தர்ஷன் ஷா பேசும்போது , ” நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பட வேலைக்கு அனுமதி வழங்கி பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை போன்றவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல்  குறைந்து வருவதை அடுத்து பல்வேறு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஏப்-5 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 5 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க மிசோரம் அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க மிசோரம் அரசானது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது, வருகிற ஏப்ரல் 5 முதல் புதிய வழிகாட்டுதலின்படி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

குரூப் 2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  போட்டித் தேர்வுகள் எதுவும்  நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறை கள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 2 ,குரூப் 2 A  அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சி அளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிர செல்ல 4 நாட்கள் அனுமதி….. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை  முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 […]

Categories
தேசிய செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழா”…. 100 தமிழக பக்தர்களுக்கு அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க இருக்கிறது. இதனையடுத்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நாளை காலை திருவிழா திருப்பலி நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 9 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் கோவோவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியைஅவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சமீபத்தில் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை வெளியிட முடிவெடுத்தது. அதேபோல் எல்ஐசி நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இது குறித்த சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டிருந்த போது செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, செபி எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு எல்.ஐ.சி. பங்கு வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பங்குகள் வெளியீடு மூலம் ரூ.60,000 கோடியை திரட்டவும் மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

OMG: திருத்தணியில் முருகன் கோவிலில்…. 31 நாளில் இவ்வளவு காணிக்கையா…??

திருத்தணி முருகன் கோவிலில் 31 நாட்களில்1,12,36,265 ரூபாய் பக்தர்கள் இதுவரை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படையான  திருத்தணி சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றார்கள். இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் திருவிழா கொரோனா தொற்று காரணமாக  தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து திருக்கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பிறகு…. வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி….!!!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு பக்தர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு அனுமதி என்று தெரிந்தவுடன் கோவை […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களே!…. இன்று (பிப்..28) முதல் 4 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பிப். 28 (இன்று) பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 (இன்று) காலை 7:00 […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரியில் வரும் 28 ஆம் தேதி முதல்….. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வரும் பிப். 28 ஆம் தேதி பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 காலை 7:00 […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை…. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! 3 நாட்கள் இலவச அனுமதி…. தாஜ்மஹாலை சுற்றி பார்க்க…. அரிய வாய்ப்பு…!!!!

தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்கள் அனுமதி அளிப்பதாக தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. தாஜ்மஹால் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களுள்  மற்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக புகழ்பெற்றது. முகலாய மன்னனான ஷாஜகான்  இறந்து போன அவரது மனைவி மும்தாஜுக்கா இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர். ஷாஜகானின் 367 வது உர்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப் போவதாக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் சர்வதேச விமான சேவை எப்போது..? வெளியான புதிய தகவல்…!!!!

சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்ததால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 50 பக்தர்களுக்கு…. அனுமதியளித்த இலங்கை அரசு….!!!!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்கள் இன்றி கச்சத்தீவு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

‘தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) மாலை 5-6 மணி வரை இவர்களுக்கு அனுமதி’…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) மாலை 5-6 மணி வரை இவர்களுக்கு அனுமதி…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் […]

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில்…..யார் யாருக்கு அனுமதி….? அமைச்சர் டக்ளஸின் தகவல்….!!!

கச்சத்தீவு திருவிழாவில் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டில் கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழாவை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது “யாழ் மாவட்ட ரீதியாக 500 பக்தர்களை அனுமதிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஜெயிலில் இருக்கும் கைதிகளை பார்க்கலாம்…. டி.ஜி.பி. அதிரடி அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கைதிகளை ஒரே நேரத்தில் 2 பேர் மட்டுமே சந்திக்கலாம். இதனிடையில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சந்திக்க அனுமதி இல்லை. ஆனால் பிற நாட்களில் காலை 9:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை சந்திக்கலாம். அவ்வாறு கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களுக்கு பின்…. அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஓகேனக்கல்அருவி. இது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவி சேதமடைந்ததாலும் மற்றும் கொரோனா தொற்று போன்ற  காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி கோரி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு […]

Categories

Tech |