அனுமதியின்றி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி மீது மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி இரட்டை வாய்க்கால் அருகே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், இதனை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். […]
