அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அவதிப்பட்டு வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர தலைவர் அஷார் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து கம்பம் மெட்டு சாலையில் உள்ள பழைய தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். […]
