ரிலையன்ஸ் குரூப் நிர்வாகத் தலைவரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் பதவிகளிலும் அனில் அம்பானி இருக்கக் கூடாது என்று செபி உத்தரவு பிறப்பித்திருந்தது. அவருக்கு பதில் ராகுல் சரின் என்பவர் ரிலையன்ஸ் பவர் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
