கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், உடுமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆட்சி காலத்தில் கால்நடை துறையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் கால்நடைகளை […]
