‘அந்தகாரம்’ படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனிடம் ஆசி பெற்றதை இயக்குனர் அட்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் அட்லி ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அட்லி தயாரிப்பில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘அந்தகாரம்’ திரைப்படம் பலரது பாராட்டை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் விக்னராஜனின் முதல் படம். இவரது வித்தியாசமான கதைக்களத்தால் முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், […]
