Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 18) முதல் அமல்…. இதெல்லாம் விலை உயரப்போகுது…. முழு லிஸ்ட் இதுதான்…. ஷாக் நியூஸ்….!!!!

சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

“இன்னும் சில தினங்கள் தான்!”…. கடும் சிக்கலை சந்திக்கவுள்ள இலங்கை…!!!

இலங்கையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டும் தான் எரிபொருள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் கடும் சிக்கலான நிலையை சந்திக்கவுள்ளனர். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால், டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை மக்களுக்கு விற்க அரசாங்கம் தடை அறிவித்திருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கும் தங்களுக்கு எரிபொருள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை…. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்…!!!

இலங்கை அரசு அத்தியாவசிய பணி இல்லாதவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி….. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மத்திய அரசு டீசல் விலையை 21 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என்று சங்கம் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை (ஏப்.1) முதல்…. சிலிண்டர் முதல் மருந்து விலை வரை…. எகிறும் அத்தியாவசிய பட்டியல்….!!!!

விலை உயர்வு, புதுப்புது விதிமுறைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் கூடுதலாக ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கக் கட்டணமும் நாடு முழுவதும் உயர்கிறது. அதிலும் குறிப்பாக சுங்கக் கட்டணம் சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அத்தியாவசிய சேவை…. உதவி எண்கள் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கல்களை சந்தித்தால் 011-23063554, 23060625 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சோப்பு, ஷாம்பூ, பிஸ்கெட்டுகள் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், பெர்ஃப்யூம், டியோடரண்ட் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் எரிபொருள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வரை புதிய உச்சத்தில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு…. இதெல்லாம் இருப்பு வச்சிக்கோங்க…. சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே இதையெல்லாம் உடனே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
உலக செய்திகள்

“அத்தியாவசிய பொருட்களை சேமிக்க மக்களுக்கு வலியுறுத்தல்!”.. சீன அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

சீன அரசு, அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீன நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விற்பனைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அரசு அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் இவ்வாறான அறிவிப்பிற்கு பின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் அதிகமாக பொருட்களை வாங்கி வீடுகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடைகளுக்குள் அனுமதி இல்லை!”.. ஜெர்மன் மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

ஜெர்மன் நாட்டின் Hesse என்ற மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள்  அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்வதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள Hesse என்ற மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தின் ஃப்ராங்பர்ட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தற்போது நாட்டில் இருக்கும் பல மாகாணங்களில் […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அங்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பால், மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பால், மளிகை, காய்கறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்…. அதிர்ச்சி…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒரு லிட்டர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பொருட்களே இல்ல…. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை டி ஐ.ஜி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தேனி மாவட்டம் கூடலூருக்கு அருகில் பளியன்குடி என்கின்ற கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணத்தால் காய்கறி, அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்கள் இன்றி தவித்தனர். இதனையடுத்து இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு காய்கறி வியாபாரிகளும், லோயர் கேம்ப் காவல்துறையினரும், நேதாஜி அறக்கட்டளையினர்களும் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல்லின் சரக டி.ஐ.ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அப்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு… அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதா..? சீமான் கண்டனம்…!!

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதில் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளின் நேரத்தை காலை 6 மணி முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கு..! தேவையானதையெல்லாம் இப்போவே வாங்கிறனும்… அலைமோதிய பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அலை மோதியது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை முன்னிட்டு மெயின் ரோடு, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை […]

Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் – வணிகர் சங்கம் முடிவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உயரும் விலை… முடங்கும் தமிழகம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருந்து பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த பொருட்களும் விலை உயர்வு?… போச்சு அவ்வளவுதான்… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சிலிண்டர் பெட்ரோல் விலையை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து தொழில் […]

Categories
அரசியல்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடுமையான நடவடிக்கை… அமைச்சர் காமராஜ்

அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் […]

Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – மாநில அரசு உத்தரவு!

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் பொருட்களை பதுக்குவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 9 குழுக்கள் அமைப்பு – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் காலை 6-9 […]

Categories

Tech |