கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]
