வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வடக்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் வரும் 24ஆம் தேதி இது புயலாக வலுப்பெற்று 26ஆம் தேதிகளில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள புயல் தீவிர, அதி தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஷ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. […]
