வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவத்தினரும் போராடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 17000 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து வேகமாக பரவிவரும் இந்த […]
