ஆட்டோ டிரைவரை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ மெக்கானிக்கான இவர் நேற்று மாலையில் தனது வீட்டு வாசலில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் ஆசிப் மற்றும் சிலர் அங்கு வந்து பிரகாஷை சரமாரியாக கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தனது வீட்டிற்குள் […]
