அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது. […]
