தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் […]
