முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்படி எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் இருக்கும் வடவள்ளி, தொண்டாமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் காலை முதல் சோதனை […]
