இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச் சேவையை முடக்கும்படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து ஆகிய நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் […]
