பேரிடர் கால சலுகை என மின் சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டணம் நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள முக.ஸ்டாலின் நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின்நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்பத்திற்கு ஆளாகி இருப்பது கண்டனத்துக்குரியது. மின்கட்டணத்தில் முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் […]
