தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை […]
