Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாலை 6மணிக்கு – ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு …!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள் என அதிமுக சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விசுவாச தொண்டர்களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய செயல்களை பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்த்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி …!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு மனம் குளிரும் அறிவிப்புகள்… முதல்வர் பழனிசாமி அதிரடி…!!!

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்க மட்டும் கூட்டணி அமைச்சா…! 234 சீட்டும் அதிமுக தான்… நாங்க அழுத்தம் கொடுப்போம் … அமைச்சர் போடும் கணக்கு …!!

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தான கேள்விக்கு, VAT வரியை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவு. ஆந்திரா,  கர்நாடகா, கேரளா மாநிலங்களை விட மிக மிக குறைவு. பெட்ரோல், டீசல் விலை எல்லா தரப்பட்ட மக்களையும் பாதிக்கின்ற ஒரு விஷயம். இந்த விஷயத்துல மத்திய அரசு கண்டிப்பா குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு, அதுக்குரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், அமமுக தலைமையில் தான் மூன்றாவது அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த பக்கமே திரும்பி பாக்கல …! வலையில் சிக்க மாட்டோம்… நாங்கள் அதிமுக சிங்கங்கள்…. டிடிவிக்கு கனவுக்கு செக் ….!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற டிடிவி கருத்து குறித்த கேள்விக்கு, ஓ.பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்பது டிடிவி தினகரனின் நட்பாசை. டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவுக்கு எதிராகவும்,  புரட்சித்தலைருக்கு எதிராகவும், புரட்சி தலைவி அம்மாவுக்கு எதிராகவும் கட்சியாக ஆரம்பிச்சது போனி ஆகவில்லை. இப்போ வருவாங்களா ?  வருவாங்களான்னு வாசல் திறந்து வச்சிட்டு எந்த வகையிலாவது ட்ரை பண்ணுறாங்க. ஆனால் ஒரு தொண்டர் கூட அந்த கட்சிக்கு போக மாட்டாங்க. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் நல்லது பண்ணிட்டாரு… தொகுதி தொகுதியா போறீங்க… மக்கள் கட்டம் கட்ட போறாங்க…!!

தமிழக மக்கள் உங்களுக்கு கட்டம் கட்டி உக்கார வச்சுருவாங்க என திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தி, ஊழல் பட்டியலை திமுக ஆளுநரிடம் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்னொரு நல்லது  திமுக தலைவர் ஸ்டாலின் பண்றாரு. என்ன பண்றார்ன்னா ? ஆர். ராஜாவை தொகுதி தொகுதி அனுப்புறாரு. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்மா அவர்கள் வெளிக்கொண்டு வந்து, 1லட்சத்தி 76ஆயிரம் கோடி திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெயர் தான் தமிழ்நாடு…! ”ஆனால் ஒன்னும் இல்லை”… ஸ்டாலின் குற்றசாட்டு …!!

தமிழ்நாடு என வெறும் பெயர் தான் ஆனால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5% வட மாநிலத்தவர்களை நியமனம் செஞ்சிட்டு வருகிறார்கள். தொடர்ந்து அதுதான் நடந்துகிட்டு வருது. 2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல் துறை, என்.எல்.சி, பாரத மிகை மின் நிலையம், வருமான வரித்துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இணையும் பிரபல தமிழ் நடிகர்?… பரபரப்பு தகவல்…!!!

தமிழில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனுமதி கொடுக்குறீங்க ? பெருந்தன்மைனு சொல்லுறீங்க ? திமுகவின் ‘பி டீம்’ யார்? மாஸாக பதிலளித்த டிடிவி….!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலா உடல் நிலை நார்மல் ஆயிட்டாங்க. இருந்தாலும் மருத்துவர்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுங்க என்று அட்வைஸ் பண்ணி இருக்காங்க. 24ஆம் தேதி அம்மாவுடைய திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்துவாங்க, கோவில் போகணும்னு சொன்னாங்க. சசிகலா தொடர்ந்த வழக்கில், நல்ல விதமான தீர்வு கிடைக்கும்ன்னு நம்புறோம். எங்களுக்கு சாதகமான தீர்வு சட்டப்படி கிடைக்கும்ன்னு நம்புறோம். சசிகலா மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பார்கள்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றம் தொடர்ந்து இருக்கு.  அதனால் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை விமர்சிக்கும் பேரரசு… சர்ச்சைக்குரிய ட்விட்…!!!

பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு அதிமுகவை பற்றி விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking News வரணும்…! ஸ்டாலின் போட்ட பிளான்… அமைச்சர் கடும் தாக்கு …!!

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர்  விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார். டெண்டரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு முன்பே சிறை…! திமுகவினர் ஷாக்… அமைச்சர் எச்சரிக்கை …!!

ஊழல் என்ற வார்த்தையை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசினால் நல்லது என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர் என்றும், ஊழலுக்காக தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் விருது வாங்கி அவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்தார். 2G வழக்கு இன்னும் முடியவில்லை எனவும்,  தேர்தலுக்கு முன்பாகவே திமுகவினர் சிறை செல்லவேண்டிய நிலை […]

Categories
மாநில செய்திகள்

அம்மா மினி கிளினிக்கில்…! பேய் கடிக்கு மருந்து… கலகலப்பாக பேசிய அமைச்சர் …!!

அம்மா மினி  கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்து உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அப்போது ஒரு கிராமத்திற்கு முக்கியமானது மருத்துவமனை எனவும், இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்துகள் உள்ளது எனவும் பேசினார். பிறகு பொதுமக்களை பார்த்து பேய்கடி இருக்கா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட்டில வந்து சொல்லுவீங்களா ? நான் அமைச்சரே இல்ல… ஏன் பொய் சொல்லுறீங்க …!!

நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார்.  என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது. அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்று அறிக்கை… அரைவேக்காட்டு அறிக்கை…. நான் அமைச்சரே இல்ல… ஸ்டாலினுக்கு பதிலடி …!!

நேற்று, தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார்.  என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது. அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்னைக்கே எடுத்த முடிவு…! எல்லா மாநிலத்துக்கும் பலன்… செமையா கண்டிஷன் போட்ட ”ஜெ” …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், GSTக்கு அம்மா கண்டிஷன் போட்டாங்க. நாங்க VAT இழப்பீடு 5000 கோடி ரூபாய் ஏமாந்து விட்டோம். அப்போ மத்திய ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் அரசு எங்களை மோசம் பண்ணிட்டு. அதே போல நீங்களும் மோசம் பண்ணிடுவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.  அதனால் நீங்க ஒரு உத்தரவாதம் கொடுங்க. தமிழகத்தில் GSTயை அமல்படுத்தணும் என்றால் 14% இழப்பீடு சட்டமாக்கினால் மட்டுமே நாங்கள் GSTயை ஆதரிப்போம் என தெரிவித்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல வரலாறு தெரியணும்…! வாய் பேசுறீங்களே…. வாங்கி தந்து இருக்கலாம்லா ? விளாசிய அமைச்சர் …!!

ஜெயலலிதா GSTயை ஆதரிக்காமல் இருந்தாங்க, இப்போ இருக்கும்  கூடிய அரசு பாஜகவுக்கு எடுபிடியாக இருக்குது என எதிர்க்கட்சி தலைவர்  குற்றம்சாட்டுகின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் முதல்ல வந்து வரலாறு தெரிஞ்சுக்கணும். இல்ல சப்ஜெக்ட் அறிவாவது இருக்கணும், அதுவும் கிடையாது. காங்கிரஸ் – தி.மு.க ஆட்சி காலத்தில் VAT  அறிமுகம் செய்தார்கள். மாநில வரி என இருந்ததை VAT என மத்திய அரசு மாற்றியது. இதனால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பீடை தருவீர்களா ? என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சகணக்கில் இருக்கு…! இது நா கொண்டு வந்தது…. அப்பவே அம்மாட்ட பேசுனேன்… கெத்தாக பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், தண்டையார்பேட்டை தாலுகாவை  பொறுத்தவரை 88 நபர்களுக்கு இன்றைய தினம் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, விதவை தொகை, முதியோர் உதவித்தொகை,  ஆதரவற்றோருக்கான தொகை இது போன்ற பல்வேறு வகைகளில்  அரசியல் உதவி செய்திருக்கிறது. மீன்வளத்துறையை பொறுத்தவரை கடந்த புயலின் போது சென்னை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு மோதிக் கொண்டு முழுமையான அளவுக்கு சேதமடைந்து, கணக்கெடுப்பு செய்யப்பட்டு,  1கோடி 65லட்சம் ரூபாய் படகு உரிமையாளருக்கு  வழங்கப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊதாரித்தனமா செலவு செய்யுறாங்க…! நாங்க அப்படி இல்லை…. சமூகநீதி பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவுடைய அரசைப் பொறுத்தவரை ஒரு சமூக நீதிக்கான அரசு. திமுக ஆட்சியை பொறுத்தவரை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை கட்டுக்கோப்புக்குள் வைக்கப்பட்டு, கடன் வாங்கினாலும், அது மூலதன செலவுக்கும், ஒரு ஆக்கப்பூர்வமான செலவுக்கும் பயன்படுத்தும். இது சமூக நீதிக்கான அரசாக இருப்பதால், இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சமூகநீதிக்கு அதிக நிதி ஒதுக்கீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரு முதல்வரா ? அதை அவுங்க சொல்லணும்…. வம்பிழுக்கும் டிடிவி… கடுப்பில் எடப்பாடி …!!

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலில் எப்படி செய்யப்பட்டோமோ, அப்படி செயல்படுவோம். வேட்பாளர்கள் யார் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் தீர்மானித்து தேர்தல் பணியை மேற்கொள்வோம். தேர்வுக்கு எப்படி மாணவன் தயாராக இருப்பானோ அதே மாதிரி எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராயிட்டு இருக்காங்க. எல்லா பணிகளும் படிப்படியாக  நடக்கும். சசிகலாவே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து சொல்வார். தேர்தல் பிரசாரத்துக்கு வருவது பற்றியோ, அரசியல் நடவடிக்கை குறித்தோ அவர் பேசுவார். யார் முதல்வர் என்று மக்கள்தானே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எண்ணம் நிறைவேறாது…! அது ஒரு தீய சக்தி…. அதிமுகவை மீட்டெடுப்போம்… உறுதியாக சொன்ன டிடிவி ..!!

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை மீட்டு எடுக்கவே அமமுக தொடங்கப்பட்டதாக மீண்டும் குறிப்பிட்டார். மேலும் சசிகலா 8ஆம் தேதி வந்தார்கள். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க சொல்லியிருக்காங்க. ஓய்வு முடிஞ்சதும் சசிகலா வெளியில் வருவார்கள். திமுக என்பது தீயசக்தி, திமுக தான் எங்களுடைய அரசியல் எதிரி. திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் சொன்னா… யாரும் கேட்க மாட்டாங்க…. அரசு விழாவில் அமைச்சர் அதிருப்தி …!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த அரசு விழாவில் அமைச்சரை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் கூட்டத்தின் போது செல்போனில் பேசிய தொண்டரை கண்டித்தார். பின்பு அமைச்சரை விட தனது பேச்சுக்கு தொண்டர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ? வெளியான முக்கிய அறிவிப்பு ….!!

12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆற்றில் தண்ணீர்… ஓடுதோ, இல்லையோ….! மூலை முடுக்கில் ”அது”… அரசை வெளுத்த நீதிபதிகள் …!!

மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்  என்று ஐகோர்ட் மதுரை கிளை யோசனை கூறியிருக்கின்றது. மதுரையை தட்டான்குளம் மேலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுவில் மூழ்கியுள்ள தமிழகம்…! பூரண மதுவிலக்கு அமல் ? நீதிமன்றம் பரபரப்பு ….!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். தமிழகமே மதுவின் மூழ்கி இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது.  மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கி உள்ளது குறித்து அரசு கவலைப் படுவதில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு…. அதிமுக தலைமை கழகம் அழைப்பு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி மார்ச் 5 வரை தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி கட்சிகள்… போட்டியிடும் தொகுதி விபரம் வெளியானது… பரபரப்பு…!!!

அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி விவரங்கள் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் 2 மாஸ்டர் பிளான்… பீதியில் அதிமுக அமைச்சர்கள்… பரபரப்பு…!!!

தமிழகத்தில் சசிகலா தீட்டியுள்ள 2 திட்டங்களால் அதிமுக அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மக்களே அரிய வாய்ப்பு… விருப்ப மனு தரலாம்… அதிமுக அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அலாவுதீனின் அற்புத விளக்கா”… அதிமுகவை சரமாரியாக விமர்சித்த ப. சிதம்பரம்…!!!

ஆட்சி முடியும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ என அதிமுக அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமகவை போல கேட்க…. நிறைய டிமாண்ட் இருக்கு…. நெருக்கும் தேமுதிக … திணற போகும் அதிமுக …!!

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பான பணியைத் தொடங்குவதும் தொடங்குங்கள் என்று தான் சொல்கின்றேன். பாமக 20% சதவீத இட ஒதுக்கீடு டிமாண்ட் அதிமுகவிடம் வைத்தது போல எனக்ளுக்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. என்ன விஷயத்திற்காக நாங்கள் கூட்டணி போகின்றோம் என பொறுத்திருந்து பாருங்கள். தேமுதிக மக்களை சந்திக்கும் என்பதை கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டு தேர்தலுக்கு வருவோம், பிரச்சாரத்திற்கு வருவோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி  234 தொகுதிகளிலும் போட்டி போடுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் முதலமைச்சர்…. பழனிச்சாமியா ? ஸ்டாலினா ? பதில் சொல்ல சொன்ன முக.ஸ்டாலின் …!!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு குறுகிய காலத்திலேயே தடுப்பணை உடைந்து விவகாரத்தில் ஒப்பந்ததாரரோ மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே காணிக் குப்பம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற அவர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் . அப்போது தாய் தந்தை இழந்த குணசேகரி என்ற இளம்பெண் தனது தம்பிகளை படிக்க வைப்பதற்காக படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு அல்லல்படுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்காதது ஏன்? : மு.க. ஸ்டாலின்

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல. திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை செய்ய ஆளு அனுப்பினாரா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலை சின்னம்மா…. மாலை அம்மா…. மறுநாள் அம்மம்மா… அமைச்சர் மீது கடும் தாக்கு …!!

சி.வி சண்முகத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் வகிக்கிற பதவி மரியாதை கூறியது,, மாண்பு குரியது. அந்த மரியாதையை காப்பாத்துற வகையில நடந்திருக்குங்க, பேசுங்க அது தான் என்னுடைய வேண்டுகோள். என்ன ஒருமையில சி.வி. சண்முகம் பேசுறாரு. அதனால என்னுடைய தகுதி குறைய போறது இல்ல.சிவி.சண்முகம் அவர்களே…!  உங்களை நோக்கி மைக் நீட்டுவது  பேசுவதற்கு தானே தவிர, வாந்தி எடுப்பதற்கு இல்லை. திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படார்னு சத்தம் கேட்கும்….! மடார்னு சத்தம் கேட்கும்…. ஸ்டாலினின் புது விளக்கம் …!!

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, விழுப்புரத்துல பெண்ணை ஆற்றை தடுப்பனை உடஞ்சி விழுந்த காட்சி ஒன்று போதாதா ? அது ஒன்று போதாதா சம்பிளுக்கு. இருபத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்பிட கட்டப்பட்ட தடுப்பனை, ஒரு மாத காலத்துல உடைஞ்சு விழுந்துருச்சி அது அணை இல்ல சுவர் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சொல்றாரு.காலையில பார்த்தா அணைனு சொல்லுவாரு, ராத்திரில பார்த்தா சுவர்னு சொல்லுவாரு. அப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படார் படார்னும்…. மடார் மடார்னும் சத்தம் வரும்… அது தான் பழனிசாமி ஆச்சி …!!

கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே எடப்பாடி பழனிசாமி அரசில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க முடியும் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிச்சாமி எதையும் செய்யல என்கிறதுக்காக தான் தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய மனுக்கள் மூலமா சொல்லி வராங்க. இந்த லட்சணத்துல பூத கண்ணாடி வச்சி பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்த குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது அப்படின்னு பழனிச்சாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்பத்திற்கு தலா 3லட்சம் – சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு …!!

விருதுநகர் மாவட்டம் அச்சம் குளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…! தமிழக அரசுக்கு அவகாசம்…. அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

கிராமசபை கூட்டங்களில் நடத்தக்கூடிய வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கா விட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் மக்கள், நீதி மையம் கட்சி சார்பாக கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்தாய் வாழ்த்து தெரியல…! திணறிய அமைச்சர் ஜெயக்குமார்…. வைரலாகும் வீடியோ …!!

கல்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் மேடையிலே திணறினார். புதுப்பட்டினம் மற்றும் உய்யாளி குப்பம் மீனவர்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தொடங்குவது வழக்கம். ஆனால் கல்பாக்கத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 7 அமைச்சர்கள்… சற்றுமுன் திடீர் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரனை நம்பாதீங்க சசிகலா – கடுமையாக சாடிய சி.வி.சண்முகம்!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில், சசிகலா கொடி கட்டிட்டு வந்ததற்கு வழக்கு தொடர்வது விரைவில் நடக்கும். நடக்கவேண்டி நேரத்தில் நடக்கும். சட்டம் தன் கடமையை செய்யும். கவலையே படாதீங்க. அண்ணா திமுகவை கைப்பற்றுவோம், போவோம்னு ஒரு வீரர், சூரர் சொல்லிட்டு இருக்காரு. சசிகலா தினகரனை நம்பாதீங்க. தினகரனிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்க என எச்சரிக்கையாக சொல்கின்றோம். தினகரன் சொல்லுவாரு ஸ்லீப்பர் செல் இருக்காங்க எனறு, எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் என்னலாம் செஞ்சோம் தெரியுமா? பரப்புரையில் பட்டியலிட்ட முதல்வர் பழனிசாமி

நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட தமிழக முதல்வர், இன்னும் குறுகிய காலத்திலேயே சட்டமன்றம் பொதுத்தேர்வு வரவேற்கிறது .இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலேயே வாக்களிக்க வேண்டுகின்றேன். பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சின்னம், மாண்புமிகு அம்மாவின் சின்னம், விவசாயிகளின் சின்னம், தாய்குலத்தின் சின்னம், தொழிலாளியின் சின்னம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டு கொள்கின்றேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மீண்டும் முதல்வராக வருவேன்… உங்களுக்காக… முதல்வர் ஈபிஎஸ்…!!!

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு நான் மீண்டும் முதல்வராக வருவேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிரட்டல்… உருட்டல்… எதுக்கும் பயப்படல…. எதையும் சந்திக்க தயார்…. முதல்வர் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் சசிகலாவை ஆதரித்து பேசுவது அவர்களுடைய விருப்பம். அடுத்த கட்சியை பற்றி நாங்க குறை சொல்ல முடியுமா ? எங்களுடைய கருத்தை தான் சொல்ல முடியும். பாமக கூட தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி  கிடையாது.கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பல கட்டமாக நடைபெறும். திமுகவில் எத்தனை கட்டமாக நடக்கிறது ? எல்லாக் கட்சிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும். பாமகவுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை எங்குமே விமர்சிக்காதது ஏன் ? முதல்வர் பதில்

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன் என்று சசிகலா சொன்னதற்கு பதில் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது என்ன வம்பா இருக்கு ? இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் அடக்குமுறையை நடத்த மாட்டார்கள். அவர்களிடம் கேட்கும் கேள்வியை என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது? சசிகலா மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று சொன்னதத்திற்கு பதிலளித்த முதல்வர், எங்களுடைய அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிவிட்டார், அண்ணன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1லட்சம் இல்ல… 2லட்சம் இல்ல… 67லட்சம் பாத்துக்கோங்க… பட்டியலிட்டு ஓட்டை அள்ளிய எடப்பாடி… கதிகலங்கிய திமுக …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, தமிழகத்திலே அம்மா அரசு எடுத்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றம் எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பது பெருமைபட வைக்கிறது. பெண்கள் நாட்டின் கண்கள். பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அந்த சக்தி அவர்களிடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திலே குடும்பத்தலைவி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றார்களோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஏற்றம் பெறும். ஆகவே தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசு சூப்பர்…! இம்புட்டு திட்டமா ? இல்லத்தரசிகளை கவர்ந்த EPS… சும்மா கலக்கிட்டீங்க …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, இங்கே அதிகமாக நம்முடைய மகளிர் அணியை  சேர்ந்த சகோதரிகள் குழுமி இருக்கிறீர்கள். அம்மாவுடைய அரசு தான் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றது. மகளிர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு  அம்மாவுடைய அரசு 81,000 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் கொடுத்து சுயஉதவி குழுவை ஏற்றம் பெற வைத்தது புரட்சித்தலைவி அம்மா. அதே வழியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பம் தான் பெருசு… வீட்டில் ஒருவருக்கு பொறுப்பு… திமுகவை வச்சு செய்த எடப்பாடி …!!

தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ளார். நேற்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த முதலவர், திமுகவை கடுமையாக தாக்கினார். அவர் பேசும் போது, திமுக நாட்டு மக்களை எண்ணி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருந்தால் நாட்டு மக்கள் உள்ளத்திலே நீங்கள் இருப்பீர்கள். பொன்மலைச் செம்மல் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அந்த வழியில் நடைபெறுகின்ற அம்மாவுடைய அரசு நாட்டு மக்களை  எண்ணிப்பார்த்து திட்டங்களை […]

Categories

Tech |