அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பின் அதிமுகவின் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுக விதிகளுக்கு முரணானது […]
