தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெரும்பான்மையாக இபிஎஸ் மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருந்ததால் ஓபிஎஸ் ஆல் எதுவுமே செய்ய முடியவில்லை.. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு […]
