தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது […]
