குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு காலையில் தலைவர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டார்கள். இதில் அதிமுக சார்பாக எம்.கணேஷ் தாமோதரன் என்பவரும் திமுக சார்பாக கே.பி.குமார் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டார்கள். இதையடுத்து உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தார்கள். இதில் அதிமுக 5 வாக்குகளும் திமுக 3 வாக்குகளும் […]
