அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித் தனியே பிரிந்து இருக்கின்றனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாநகர் முழுதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க கட்சி தொடங்கிய 1972ம் வருடம் கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி, அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்கள்தான் […]
