முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதாவது அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வாக்கு சேகரிப்பு குறித்த நேர்காணல் நடந்துள்ளது. அந்த நேர்காணலின் போது “பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறி […]
