லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு எம்.எல்.ஏக்கள் 7 பேர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் வாக்குவாதம் செய்த ஆதரவாளர்களை போலீசார் அடித்து விரட்டியடித்தனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
