எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. […]
