ஆற்காட்டைச் சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி., முகமது ஜான் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு இபிஸ் மற்றும் ஓபிஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். வாலாஜா அருகே பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது முகமது ஜானுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. கடந்த 2011 ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன இவர் […]
