அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு […]
