அதிபர் மாளிகையில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அப்போது அதிபர் மாளிகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இந்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் எடுக்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் டாலர் பணத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். […]
