சர்ச்சைகளுக்குப் பெயர் போனவரான திரைப்படம் இயக்குநர் ராம்கோபால் வர்மா, இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரௌபதி குடியரசுத் தலைவர் ஆனால் பாண்டவர்கள் யார்..? அதைவிட முக்கியம் கவுரவர்கள் யார்..? என்பதுதான் என ராம்கோபால் வர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கூடூர் நாராயணரெட்டி, ராம் கோபால் வர்மாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளித்துள்ளார். […]
