இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் போர் வீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ மந்திரியாக இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, “நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் […]
