இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டின் அனைத்து மக்களுக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனினும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ஊரடங்கு அமல்படுத்த மறுத்து வந்தார். இறுதியில் புத்த மத குருக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கொடுத்த அழுத்தத்தினால் இம்மாதம் 30ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாட்டு மக்களுடன் அதிபர் தொலைக்காட்சியில் […]
