ஹைதி நாட்டில் அதிபர் கொலை செய்யப்பட்டதால், வன்முறை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சேவை, மர்ம கும்பல் அவரின் இல்லத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் அவரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அதிபரின் கொலைக்கு காரணமான, வெளிநாட்டு கூலிப்படையினர் 28 பேரை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்வதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டபோது கூலிப்படையை சேர்ந்த மூவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் 17 பேர் […]
