வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடும் நெருக்கடி ஏற்படப்போவதாக நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். வடகொரியாவில் மனித உரிமைகள் குழுக்கள் கடும் உணவு பற்றாக்குறை, பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலைப்பாடு ஆகியவற்றை நாடு சந்திக்க போகிறது என்று எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கட்சி மாநாட்டில் பேசிய போது, தற்போது உள்ள சூழ்நிலையை கடந்த 1990ஆம் வருடங்களில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்துடன் ஒப்பிட்டிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தன் எல்லைகளை வடகொரியா அடைத்துள்ளது. இதுகுறித்து […]
