பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியானது. நாடாளுமன்றத்தில் 577 ஆசனங்களில் இம்மானுவேல் மேக்ரோன் கட்சிக்கு 245 ஆசனங்கள் மட்டும் தான் கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் பெரும்பான்மையை இழந்திருக்கிறார். 289 ஆசனங்கள் பெற்றால் தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், மேக்ரோன் அரசுக்கு, கட்சிகளின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இப்படியான ஒரு நெருக்கடி […]
