திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. மழைக் காலத்தில் படுகையிலிருந்து வினாடிக்கு 2,000 லிட்டருக்கு மேல் பல்வேறு மாதங்களாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. எனினும் அந்த கிணறு நிரம்பவில்லை. இந்த கிணற்றில் உள் வாங்கும் தண்ணீரின் வாயிலாக சுமார் 15 கி.மீ சுற்றளவிலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் […]
